செந்தமிழ் வீரச் சிலம்பக் கலைக்கூடம் 2019 ஆம் ஆண்டு முதல் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு முன்னோடி சிலம்பக் கலை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னை – குன்றத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து சிலம்பக் கலை பயிற்சிகளை வழங்கி வருகிறது.
எங்கள் விரிவான செயல்பாடு
எங்களுடன் 20-க்கும் மேற்பட்ட சிலம்ப அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதன் மூலம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் எங்கள் பயிற்சி மற்றும் கலைச் செயல்பாடுகள் விரிவடைந்துள்ளன.
சமூகப் பொறுப்பும் பண்பாட்டு சேவையும்
தமிழர் பாரம்பரிய கலைகளை மீட்டெடுத்து, இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் முதன்மை நோக்கம். அதனுடன் மட்டுமல்லாமல், பல்வேறு சமூகப் பணிகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
மாணவர் திறன் மேம்பாடு & போட்டிகள்
மாணவர்களின் தனித்திறமைகள் மற்றும் குழுத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறோம். இதன் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் போட்டித்திறன் சிறப்பாக மேம்படுகிறது.
2022 ஆம் ஆண்டு சென்னை – பூந்தமல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கமளித்தார்கள்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை – கிண்டியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் 1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் அ. சற்குணம்
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி சிறப்பித்தனர்.
இவ்வாண்டு செந்தமிழ் வீரச் சிலம்பக் கலைக்கூடம் சார்பில் நடைபெறக்கூடிய மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி,
தேதி: ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை
இடம்: மாண்ட்போர்ட் பள்ளி, உள்அரங்கம் – சென்னை, கிண்டி
இந்தப் போட்டியில் 2000-க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்று தங்களது சிலம்பத் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.