Philanthropy
சமுதாய நற்பணிகள்
நமது செந்தமிழ் வீரச்சிலம்பக் கலைக்கூடம் 2019 ஆம் ஆண்டு முதல் பதிவுப்பெற்று செயல்பட்டு வருகிறது. தமிழர் தற்காப்புக் கலைகளை மீட்டெடுப்பதுடன், சமூக நலனிலும் தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வருகிறோம்.
சென்னை பெருவெள்ளத்தின் போது சைதாப்பேட்டை பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி.
கடலூரில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரண உதவி.
கஜா புயலில் பட்டுக்கோட்டை பகுதிகளில் பாதிக்கப்பட்ட 2000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி.
கொரானா காலத்தில் தஞ்சை, சென்னை, ஆரணி பகுதிகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள்.
மருத்துவம் பயிலும் ஏழை மாணவனுக்கு ₹2,00,000 நிதியுதவி.
அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் தொட்டி, உயர்தர கணினி மற்றும் அடிப்படை வசதிகள்.
காமராஜர் பிறந்தநாளை அரசுப் பள்ளி மாணவர்களுடன் எழுதுபொருட்கள் வழங்கி கொண்டாடல்.
ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ செலவு உதவி மற்றும் இரத்ததான சேவை.
மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிப்பு போன்ற சுற்றுச்சூழல் நலப்பணிகள்.